என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விராலிமலை ஜல்லிக்கட்டு
நீங்கள் தேடியது "விராலிமலை ஜல்லிக்கட்டு"
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இன்று 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. #Jallikattu2019 #Jallikattu #ViralimalaiJallikattu #GuinnessRecord
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன.
கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை நிறைவு பெற்றது. காளைகள் முட்டியதில் பார்வையாளர்களில் ராமு (25), சதீஷ்குமார் (43) ஆகியோர் உயிரிழந்தனர். மாடுபிடி வீரர்கள் உட்பட 41 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், 21 காளைகளை பிடித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம் முதலிடம் பிடித்தார். திருச்சி காட்டூரை சேர்ந்த கார்த்தி என்பவர் 16 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்தார்.
விராலிமலையில் 1,353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்தது. கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர். #Jallikattu2019 #Jallikattu #ViralimalaiJallikattu #GuinnessRecord
கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தொடங்கி வைத்தார். #ViralimalaiJallikattu
தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விரும்பினார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த ஜல்லிக்கட்டில் 2000 மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது. 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க இருக்கிறார்கள். 2000 மாடுகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால் இந்த போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது.
கின்னஸ் சாதனைப் படைக்க இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 8.15 மணிக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.

×

X